Thursday, December 12, 2019

ஐயப்பன் கடவுளா, மனிதனா? - (Story of Ayyappan)

                கடவுள் இருக்கிறாரா, இல்லையா? அவர் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்ற எண்ணம், கேள்வி தொடர்ந்து மத நம்பிக்கை அற்றவர்களால் மட்டுமன்றி இறை நம்பிக்கை உள்ளவர்களாலும் தொடுக்கப்படும் கேள்வி. அறிவியலை நம்புவோர்கள்  இயற்கையை (Force) நம்பாவிட்டால் எந்த சமன்பாடும் மெய்யாகாது. அந்த அறிவியலை நம்புவோர் இயற்கை என்ற பெயரில் அழைக்கின்றனர். இறையை நம்புவோர் இயேசு என்றும், ராமன் என்றும், அல்லா என்றும் ஒவ்வொரு பெயரில் அழைக்கின்றனர். கடையும், பொதியும் வெவ்வேறானால் என்ன, உள்ளிருக்கும் இனிப்பு ஒன்றுதானே?

இயேசு கிறிஸ்து பூமியில் மனிதராய் பிறந்து, மக்களுக்காக வாழ்ந்து மறைந்த பெருந்தகை. மக்களுக்குச் சேவை செய்யும் நற்பண்புகளைக் கொண்டிருந்ததால் அவரை "தேவதூதன்" என்று மக்கள் அழைத்தனர். (கடவுள் தன்மை கொண்ட மனிதராய் வாழ்ந்தவர்). அப்படி உலகின் ஒவ்வொரு பகுதிகளிலும் அவ்வப்போது தேவதூதர்கள் (எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல் மக்கள் சேவையில் தங்களை அர்பணித்துக்கொண்டவர்கள்) தோன்றிக்கொண்டேதான் இருக்கின்றனர். 



பந்தள மகாராஜா ராஜசேகரனுக்கு நீண்ட நாட்களாக பிள்ளைப் பேறு இல்லாமல் இருந்த வேளையில், பிள்ளை வேண்டி சபரிமலையில் குடிகொண்டிருக்கும் தர்மசாஸ்தாவிடம் மனமுருகி வேண்டினான். ஒருநாள் தன் பரிவாரங்களுடன் வேட்டைக்காக சென்றபோது, பம்பை நதிக்கரைக்கு அருகே கிடைத்த ஒரு குழந்தை அழும் ஓசை கேட்டு சென்று பார்த்த போது, பம்பை ஆற்றுக்கு அருகே ஒரு குழந்தை இருப்பதைப் பார்த்து, அகமகிழ்ந்து, அதை எடுத்து வந்து தன் பிள்ளையாய் பாவித்து வளர்த்து வந்தான்.

கழுத்தில் மணி ஒன்றை அணிந்திருந்ததால் அதை மணிகண்டன் அன்று பெயரிட்டு அழைத்து வந்தான். அரசனும் அரசியும் அகமகிழ்ந்த போதும் 
அந்த சமஸ்தானத்தின் திவான் ஒருவருக்கு காட்டில் கிடைத்த பிள்ளை, மன்னருக்குப் பின் அரசாளப் போவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. குருகுலத்தில் சென்று பயிலத் துவங்கிய பாலகன் மணிகண்டன், குருநாதர் கற்றுக்கொடுத்த வித்தைகளை எளிதில் செய்து காண்பித்து அசத்தியதோடு, குருநாதரின் வாய் பேச முடியாமல் இருந்த பிள்ளையை பேச வைத்து அதிசயிக்க வைத்தார்.






இந்த நிலையில் மகாராணி கர்ப்பம் தரித்து ராஜராஜன் எனும் மகவைப் பெற்றெடுத்தார்.அரசன் மணிகண்டனை தன் மூத்த மகனாகப் பாவித்து திவானிடம் கூறி, தனக்குப் பின் அரியாசனத்தில் அமர வேண்டியது மணிகண்டன்தான் என்றும் கூறினார். இதனை ஏற்றுக்கொள்ள முடியாத திவான், மணிகண்டனைக் கொல்ல பல வழிகளையும் கையாண்டார்.
தன் முயற்சிகள் அனைத்தும் தோல்வியடையவே, திவான் மகாராணியிடம் சென்று எங்கோ காட்டில் கிடைத்த பிள்ளைக்கு அரியாசனம் கொடுப்பது தவறு, ராணியின் வயிற்றில் பிறந்த பிள்ளைக்கே அதற்கு முழு உரிமை உள்ளது என்றும் தவறான போதனைகள் செய்தார். ராணியும் அந்த சூழ்ச்சியில் மனம் மாறினார்.

தனக்குத் தீராத தலை வலி உள்ளதென்றும், அதற்கு தக்க மருந்து புலிப்பாலை அருந்துவது மட்டும்தான் என்றும், காட்டிற்கு சென்று புலிப்பால் கொண்டு வருமாறும் மணிகண்டனைப் பணித்தார். காட்டில் கொடிய மிருகங்கள் மணிகண்டனைக் கொன்றுவிடும் என்று எதிர்பார்த்திருந்த திவான் மற்றும் மகாராணிக்கும், மனமில்லாமல் அனுப்பி வைத்த மன்னனுக்கும் ஆச்சரியம் காத்திருந்தது.

காட்டிற்குச் சென்ற மணிகண்டன், அங்கே அழுதா நதிக்கரையின் அருகே தன்னைத் தாக்க வந்த மகிஷி யுடன் போரிட்டு, அவள் தலை மீது நர்த்தனம் செய்து, வதம் செய்து, சாப விமோசனம் அளித்தார். பிறகு, அங்கே இருந்த புலியின் மீது அமர்ந்து, ஒரு புலிக்கூட்டத்துடன் அரண்மனையை நோக்கி பயணம் செய்தார். (தேவேந்திரனே புலியாக, மணிகண்டனின் வாகனமாக வந்ததாக கதைகள் கூறுவர்). புலிக்கூட்டத்துடன் வந்த மணிகண்டனைப் பார்த்தா மகாராணி மனம் திருந்தினார்.

இந்தப் பிரச்சினைகளுக்குக் காரணமான திவானைத் தண்டிக்கும்படி அரசன் கூற, அதை மறுத்த மணிகண்டன், நிகழ்ந்தவை எல்லாம் விதிப்பயனே என்றும்,  அவரை மன்னித்து விட்டுவிடும்படி கூறினார். மேலும் தர்மசாஸ்தாவிற்கு ஒரு கோவில் பணியும்படியும் அரசனிடம் வேண்டிக்கொண்டார். அரசனும் அவ்வாறே செய்தான். மணிகண்டன் அம்பெய்து காண்பித்த சபரிக்கு அருகே ஒரு சந்நிதானத்தை எழுப்பினான். அந்த சன்னிதானத்திற்கு வரும் பக்தர்களை, காட்டு விலங்குகளிடம் இருந்தும், கொள்ளையர்களிடம் இருந்தும் காக்கும் பணியை மணிகண்டனும் அவர் உயிர்த் தோழன் வாவரும் கவனித்துக்கொண்டனர். சபரிமலையை அழிக்க போர்தொடுத்து வந்த உதயணன் என்பவனை இவ்விருவரும் கடுத்தா சகோதரர்களுடன் சேர்ந்து   அழித்தனர். பலப்பல வெற்றிகளைக் குவித்த போதும்  இறுதியில் எரிமேலிக்கு அருகே நடைபெற்ற போர் ஒன்றில் நண்பர்கள் இருவரும் உயிர் துறந்தனர்.



இன்றும் அவர்கள் நினைவாக வாவர் மற்றும் மணிகண்டனுக்கு அங்கே கோவில்கள் அமைத்து பக்தர்கள் வணங்கி வருகின்றனர். தங்களை வழிப்பறிக் கொள்ளையர்கள் மற்றும் காட்டு விலங்குகளிடமிருந்து காத்து உயிர் நீத்ததால் மணிகண்டனை, அய்யன் என்றும், அப்பன் என்றும் கூறி வந்தனர். காலப்போக்கில் இது "ஐயப்பனாக" மருவி அவரை தர்மசாஸ்தாவின் மறு உருவமாக வணங்கத் துவங்கினர். எல்லையில் காக்கும் அய்யனை இன்றும் "அய்யனார்" என்ற பெயரிலும் அழைத்து வருகின்றனர். தேவதூதர்களை அவர்கள் செய்த நற்செயல்களால், கடவுள்களாகவே வணங்கத் துவங்குகின்றனர். 


சுவாமியே சரணம் ஐயப்பா!



3 comments:

  1. என்ன சாமி... இப்படி ஒரு கேள்வி கேட்டு, நீங்களே பதிலை சொல்லி விட்டால் எப்படி...?

    // கடையும், பொதியும் வெவ்வேறானால் என்ன...? - உள்ளிருக்கும் இனிப்பு ஒன்றுதானே...? //

    ReplyDelete
  2. ───────o────────────────╔═╗───────────o───────
    ╔═╗║╔╦║╔╗─╔╦─────╔╦╗║─╔═╗║║║║║╔╦╔═╦╦╦╔╦──╔╦─╔╦
    ╠╗║║║║║║║╔╬╬╗──╔═╚╝╬╬╗╠╗║║║║║║║║╠╗║║║║╬╗╔╬╬╗║║
    ╚╝╚╝║║╚╬╝╚═╝╝──╚═══╝║║╚╝╚╝║╚╩╝║║╚╝╚╝║║║║╚═╝║║║
    ──────╚╩────────────═╝────────────────╔╝──╔╝──

    ReplyDelete
  3. Happy New Year

    அருமை

    www.nattumarunthu.com
    nattu marunthu kadai
    nattu marunthu online

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...