Friday, September 9, 2016

இது கவிதை அல்ல!


இது கவிதை அல்ல!



        இதழ்களின் இருபக்கமும் ஏராளமான 
       இடமிருந்தது; நிதானமாய் சிந்தித்தேன்.
   இரண்டாய்க் கூறுபோட்டு அங்கொன்றும்
   இங்கொன்றுமாய் கன்னக்'குழி'களில் புதைத்தேன்.
     இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த விழிகள்
       இதற்காய் கண்ணீர் மழை பொழிந்தது.
         இத்தோடு எல்லாம் முடிந்ததென
           இதயம் அமைதிப் பிரகடனம் செய்து கொண்டது.
             இனி தொல்லையில்லை என மனம் சாந்தி கொண்டது.
             இன்று கண்விழித்துப் பார்க்கும் வரைதான்
             இது எல்லாம்! அவள் நினைவை வெட்டிப் புதைத்த
           இடத்தைச் சுற்றிலும் காடாய்க் கருப்பு மயிர்கள்.
         இளப்பமாய் ஒரு புன்னகையை உதிர்த்து
       இதோ உன் தேவதை நான்
      இங்கிருக்கிறேன் என்பதுபோல் கன்னத்தின்
    இருபுறமும் வெள்ளை முடிகள்.
  இவள் கண்ணுறங்கும் கல்லறைத் தோட்டம்

துவென பொறிக்கப்பட்ட வாசகத்துடன்!!


6 comments:

  1. ம்ம்ம்... இது கவிதை.... வடிவமைப்பும் நன்று

    ReplyDelete
  2. கவிதையும் நன்று! அதை வடிவமைத்த விதமும் நன்று!

    ReplyDelete
  3. நல்லாருக்கே ஆவி!!! ஷேப் கூட ! படமும் அதற்கு ஏற்றாற் போல அழகு அதுவும்..கறுப்பு வெள்ளை!!!

    கீதா

    ReplyDelete
  4. இது நல்லாயில்லை! (அதாவது இது கவிதை இல்லை என்று சொல்வதைச் சொல்கிறேன்)

    பதிவின் வடிவமைப்பு அழகு, புதுமை!

    ReplyDelete
  5. அருமை...
    இது கவித... கவிதைதான்...

    ReplyDelete
  6. கவிதை கூட இடை சிறுத்து பெண்ணுருவம் தாங்கி நிற்பது அழகு !!!
    https://www.scientificjudgment.com/

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...