இந்த 2015ம் ஆண்டுக்கான வலைப்பதிவர் சந்திப்பு புதுக்கோட்டையில் அக்டோபர் 11ல் நிகழ இருக்கிறது. அதற்காக முத்துநிலவன் ஐயா அவர்களின் தலைமையில் புதிய பல திட்டங்களுடன் வெகு விமரிசையாக அரங்கேற இருக்கிறது. பல பயணங்கள் மற்றும் அலுவல் பாரங்களினால் இதுகுறித்து பதிவிட தாமதமாகிவிட்டது. பதிவர் சந்திப்புக்கென்று உருவாக்கப்பட்டிருக்கும் இந்தத் தளத்தில் சந்திப்பை பற்றிய மேலதிக தகவல்களை காணலாம்.
புதுக்கோட்டை பதிவர் நண்பர்களின் உற்சாகமான ஏற்பாட்டில் ஏராளமான நல்ல மற்றும் புதிய விஷயங்கள் இம்முறை அரங்கேறப் போகிறது என்பதைக் காண மற்ற பதிவர்கள் போல் நானும் மிக்க ஆர்வத்துடன் காத்திருக்கிறேன். புதிய விஷயங்களில் முதன்மையானது வலைப் பதிவர்கள் பற்றிய குறிப்புகளுடன் வெளிவர இருக்கும் கையேடு.இந்தக் கையேடு பதிவர் நட்பினை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்பதில் ஐயமில்லை. மிகச் சிறப்பான, வரவேற்கத்தக்க இந்த முயற்சியில் உங்களைப் பற்றிய விவரங்களை இதுவரை அனுப்பவில்லையெனில் உடன் இங்கு விரைந்து அனுப்புங்கள். இந்தப் புத்தகத்திற்கென விளம்பரமும் சேகரித்துக் கொண்டுள்ளார்கள். உள் அட்டை முதல் பக்கத்திற்கு அப்பாதுரையும், கடைசிப் பக்க வெளி அட்டைக்கு விசுஆவ்ஸமும் பங்களித்துள்ளனர். உங்களால் இயன்றதை நீங்களும் செய்தால் சிறப்பு.
iபதிவர் சந்திப்பு மேலும் சிறப்பாக மிளிர தங்களால் ஆன நிதிஉதவி செய்ய விரும்புவோர் பின்வரும் வங்கிக் கணக்கிற்கு பணப்பரிமாற்றம் செய்யலாம். NAME - MUTHU BASKARAN N,, SB A/c Number - 35154810782, CIF No. - 80731458645, BANK NAME - STATE BANK OF INDIA, PUDUKKOTTAI TOWN BRANCH, BRANCH CODE - 16320, IFSC - SBIN0016320
இவை யாவற்றையும் விட முக்கியமானது நமக்காக இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் புதிய போட்டிகள். வலைப்பதிவர் திருவிழா - 2015 - புதுக்கோட்டை மற்றும் தமிழ்நாடு அரசு – தமிழ் இணையக் கல்விக்கழகம் இணைந்து நடத்தும் உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள்இடம்பெற்றுள்ளன. ஐந்து தலைப்புகள்! ஒரு போட்டிக்கு பத்தாயிரம் வீதம் இதன் மொத்தப் பரிசுத்தொகை ரூ.50,000/- போட்டிவிவரம் :
வகை-(1) கணினியில் தமிழ்வளர்ச்சி - கட்டுரைப் போட்டி- கணினியில் தமிழ்வளர்ச்சி குறித்த ஆதாரத் தகவல்கள், ஆக்கபூர்வ யோசனைகள் -ஏ4 பக்க அளவில் 4பக்கம். இலக்கிய நயமான தலைப்பும் தருதல் வேண்டும்.
வகை-(2) சுற்றுச்சூழல் விழிப்புணர்வு - கட்டுரைப் போட்டி -சுற்றுச்சூழல் அறியாமை தரும் ஆபத்து, விழிப்புணர்வுக்கு ஆக்கபூர்வ யோசனைகள் - ஏ4 பக்க அளவில் 4பக்கம் பொருத்தமான தலைப்பும் தருதல் வேண்டும்.
வகை-(3) பெண்கள் முன்னேற்றம் - கட்டுரைப் போட்டி -பெண்களை சமூகம் நடத்தும் விதம், பெண் முன்னேற்றம் குறித்த யோசனைகள், - ஏ4 பக்க அளவில் 4பக்கம், தலைப்பும் பொருத்தமாகத் தருதல் வேண்டும்.
வகை-(4) புதுக்கவிதைப் போட்டி- முன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவை குறித்த புதுக்கவிதை - 25வரி அழகியல் மிளிரும் தலைப்போடு.
வகை-(5) மரபுக்கவிதைப் போட்டி- இளைய சமூகத்திற்கு நம்பிக்கை யூட்டும் வீறார்ந்த எளிய-மரபுக் கவிதை 24 வரி. அழகொளிரும் தலைப்போடு.
இதன் விதிமுறைகள் மற்றும் இன்னபிற மேல்/பீமேல் விவரங்களை அறிந்து கொள்ள இங்கேவிரையவும்.
கட்டுரை, கவிதை என்பதால் நாம் கலந்து கொள்ளலாமா வேண்டாமா என்று கொஞ்சமும் யோசிக்காமல் சட்டென்று உங்கள் கீபோர்டில் டைப் செய்ய ஆரம்பியுங்கள். ஆல் தி பெஸ்ட்!
சூப்பர் ஆவி! கை கோர்த்தமைக்கு!!! அழகா சொல்லிட்டீங்க...
ReplyDelete:)
Deleteஆவிசார் இப்ப சரி பதுவு போட்டிருக்கின்றார் ஏதாவது போட்டியில் கலந்து வெற்றி பெறுங்கள் ஐயா!
ReplyDeleteநன்றி ஆவி...
ReplyDeleteநம் தளத்தில் இணைத்தாகி விட்டது...
ReplyDeleteஇணைப்பு : http://bloggersmeet2015.blogspot.com/p/2015.html
புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
அன்புடன் திண்டுக்கல் தனபாலன்
வணக்கம்
ReplyDeleteஅண்ணா.
விழா சிறக்க எனது வாழ்த்துக்கள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
விழா குறித்த உங்க பதிவு விழாவிற்கு உறுதுணையாய் இருக்கிறது ஆவி!! மிக்க மகிழ்ச்சி!! புதுகை விழாவினர் சார்பாக நன்றிகள் பல:))
ReplyDeleteநமக்குள் எதற்கு நன்றி எல்லாம்? ஒரு பதிவராய் இது என்னுடைய கடமை.. இதுவே தாமதமாகிவிட்டதில் எனக்கு வருத்தம்..
Deleteவிழாவிற்கு முந்திய நாள்வரை இப்படியான பதிவுகள் முக்கியமானவை தான்னு தோணுது:) so இது தாமதமே இல்லை!! வருந்தவேண்டாம் சகா!
Deleteபகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteவிழா சிறக்க எனது வாழ்த்துகளும்....
ReplyDeleteவணக்கம்...
ReplyDeleteதாங்களும் விமரிசனப் போட்டியில் கலந்து கொள்ளலாம்...
இணைப்பு : →இங்கே சொடுக்கவும்←
புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
அன்புடன் திண்டுக்கல் தனபாலன்