Saturday, January 15, 2011

சிறுத்தை - திரை விமர்சனம்


                    "மஹதீரா" புகழ் ராஜமௌலியின் இயக்கத்தில் வெளிவந்த "விக்கிரமார்க்கடு" திரைப்படத்தின் ரீமேக் தான் இந்த சிறுத்தை. இயக்குனர் சிவாவுக்கு முதல் பாராட்டு, ஒரிஜினல் ஸ்க்ரிப்டை துளியும் மாற்றாமல் அப்படியே தமிழில் எடுத்ததற்கு!! இரண்டாவது பாராட்டு ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கும் பொருத்தமான ஆட்களை தேர்வு செய்தது, ஹீரோ கார்த்தி முதல், சந்தானம், தமன்னா  வில்லன், வில்லனின் தம்பி, மகன் மற்றும் அடியாட்கள், மந்திரி உள்பட எல்லாமே பிரமாதமான தேர்வு.

                      கதை நாம் பலமுறை பல படங்களில் பார்த்துவிட்ட கதைதான் என்றாலும் படுவேகமான திரைக்கதைதான் படத்திற்கு மிகப்பெரிய பலம். இடையிடையே காமெடி, சென்டிமென்ட், பாடல்கள் எல்லாமே இருந்தாலும் இது ஆக்க்ஷன் படங்களின் வரிசையில் என்றும் பேசப்படும்.


                      சூர்யாவுக்கு ஒரு காக்க காக்க அமைந்தது போல் கார்த்திக்கு ஒரு சிறுத்தை. இந்தப்படத்தில் இவருக்கு இரட்டை வேடம். இரண்டு வேடங்களுக்கு இடையிலும் குறைந்த பட்சம் ஆறு வித்தியாசங்களை காட்டுகிறார். பாடி லாங்குவேஜ் நன்றாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. குறிப்பாக இன்ஸ்பெக்டர் கேரக்டரில் பிரமாதப் படுத்தியிருக்கிறார். சீனியர் ஆபிசர் பானுசந்தர் இவரிடம் "ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நிச்சயம் பயம் இருக்க வேண்டும்" என்று சொல்லும்போது "எனக்கும் பயம் இருக்கு சார். எங்க நான் என் கடமைகள முடிக்காம செத்துப் போயிடுவேனோன்னு பயமா இருக்குன்னு " சொல்லிவிட்டு கம்பீரமாக சல்யுட் அடிக்கும் போது ஜொலிக்கிறார்.



                        கார்த்தி சந்தானம் காமெடி கலக்கல் காம்பினேஷன். ராக்கெட் ராஜாவாக வரும் பிக்பாக்கெட் கார்த்தியுடன் சேர்ந்து இவர் அடிக்கும் லூட்டிகள் முதல் நாற்பத்தியைந்து நிமிடங்கள் வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறது. குறிப்பாக கல்யாண வீட்டில் திருடப் போன இடத்தில் தமன்னாவின் அழகில் திடீரென மயங்கிவிட்ட நண்பனின் நிலை தெரியாமல் கிடைத்ததை எல்லாம் சுருட்டிக் கொண்டு ஓடும் சந்தானத்தை அவரைவிட வேகமாகச் சென்று "திருடனைப் பிடிச்சுட்டேன், பொறுமையா வாங்க" என கார்த்தி கூற சந்தானம் திருதிருவென விழிப்பது கிளாஸ்.


                            தமன்னா வழக்கம்போல் கமர்ஷியல் பொம்மையாக வந்து போகிறார். மயில்சாமியின்  உடையிலிருந்து பைக் வரை திருடிக்கொண்டு வரும் காட்சியில் கார்த்தி நின்ற இடத்திலயே சிக்சர் அடிக்க, தமன்னா நடிப்பில் எல்.பி.டபள்யு ஆகிறார். கொஞ்சம் நடிக்கவும் கத்துக்குங்க அம்மணி!! தெலுங்கில் வில்லனின் கதாபாத்திரம் கொடூரமாக இருக்கும். இதில் கொஞ்சம் காமெடி பீஸ் ஆக்கியிருக்கிறார்கள்.



                          நல்ல திரைக்கதையிலும் சில துளைகள் - ஊரையே தன் கைக்குள் வைத்திருக்கும் வில்லனின் தம்பி காட்டுக்குள் ஒரு காட்டுவாசிபோல் வாழ்வது ஏன்.. ரத்னவேல் பாண்டியனின் மனைவி பூமிகாவுக்கு என்ன ஆனது... தலையில் துப்பாக்கி குண்டு துளைத்த போதும், கத்தியால் பல பேர் பலமுறை குத்தியபோதும் மறுபடியும் ஹீரோ எப்படி பிழைக்கிறார்.. இதுபோன்ற கேள்விகளுக்கு ஒரு வரியிலாவது விளக்கம் கொடுத்திருக்கலாம். இருந்தாலும் பொங்கலுக்கு ரிலீசான ஜிலேபிகளில் பட்டை ஜிலேபி இதுவாகத்தான் இருக்கும். சிறுத்தை நிச்சயம் சிங்கத்தை ஓவர்டேக் செய்துவிட்டது!!

85/ 100

3 comments:

  1. //தலையில் துப்பாக்கி குண்டு துளைத்த போதும், கத்தியால் பல பேர் பலமுறை குத்தியபோதும் மறுபடியும் ஹீரோ எப்படி பிழைக்கிறார்.. இதுபோன்ற கேள்விகளுக்கு ஒரு வரியிலாவது விளக்கம் கொடுத்திருக்கலா//


    என்னிக்கு தமிழ் படத்தில் இதுக்கெல்லாம் விளக்கம் தராங்கா ?

    ReplyDelete
  2. Your vimarsanam is good...

    //தலையில் துப்பாக்கி குண்டு துளைத்த போதும், கத்தியால் பல பேர் பலமுறை குத்தியபோதும் மறுபடியும் ஹீரோ எப்படி பிழைக்கிறார்..//
    இதான் லாஜிக் இல்லா மேஜிக் சம்திங்ஓ? ஹாஹாஹா... சினிமாவை ஆராயக்கூடாது பாஸ்... ஜஸ்ட் பாக்கணும்... ஜஸ்ட் கிட்டிங்...


    AnanthKarthik & Thamanna... I like them both... so kandippaa paapen... Thanks

    ReplyDelete
  3. Thalaiavarae , i was expecting Kaavalan review from YOU :)

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

இதுவும் பிடிக்கும்.. படிங்க!!

Related Posts with Thumbnails