Friday, January 14, 2011

2012- பொங்கல் படங்கள் ஒரு அலசல்!!

                              
                                             இந்த பொங்கலுக்கு பல படங்கள் வெளியாகிறது என்றாலும் ஸ்பாட்லைட் இருக்கும் சில படங்களைப் பற்றி அலசுவோம்!!


காவலன்: 
மலையாளத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படத்தை அப்படியே எடுத்திருந்தால் நல்ல கதையம்சமுள்ள படமாக இருக்கும். இளைய தலைவலிக்காக (ஸாரி .. தளபதிக்காக) ஏதேனும் மாற்றம் செய்திருந்தால் வழக்கமான விஜய் படம் போலத்தான் இருக்கும். நீண்ட நாட்களுக்கு பின் அசின். பல அரசியல் தடைகளை தாண்டி வெளிவரும் படம்.
ஹைலைட்: கிளைமாக்ஸ்


ஆடுகளம்:
தனுஷ் வெற்றிமாறன் வெற்றிக் கூட்டணி மீண்டும் களம் இறங்கியிருக்கிறது. பாடல்கள் ஏற்கனவே வெற்றி பெற்றுவிட்ட நிலையில் பொங்கல் படங்களில் அதிக எதிர்பார்ப்புடன் வருவது இந்தப் படம். நாயகி தாப்சீ தமிழுக்கு புதுசு.
ஹைலைட்:  கோழிச் சண்டை, ஆத்தி ஆத்தி பாடல்


சிறுத்தை:
கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்த படம். மீண்டும் தமன்னாவுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார். தெலுங்கில் "விக்ரமார்க்கடு" என்ற பெயரில் ரவி தேஜா நடித்து வெற்றி பெற்ற படம். சந்தானத்தின் காமெடியுடன் களை கட்ட வருகிறது. 
ஹைலைட்:  கார்த்தியின் இன்ஸ்பெக்டர் கேரக்டர் மற்றும் வில்லன்.


இளைஞன்:
கலைஞரின் கதை வசனத்தில் பா. விஜய் நடித்து வெளிவரும் படம். கப்பல் கட்டும் தொழிலாளர்களின் கதை. மீரா ஜாஸ்மின், ரம்யா நம்பீசன் கதாநாயகிகள். நமீதா வில்லியாக நடித்திருப்பதாக கேள்வி! நாற்பது ஐம்பது வருடங்களுக்கு முன் நடக்கும் கதை.
ஹைலைட்:  கலைஞர் எழுதி பா. விஜய் பேசியிருக்கும் அனல் பறக்கும் வசனங்கள்.


மிரப்பக்காய்: (மிளகாய்)


தெலுங்கில் ரவி தேஜா நடித்து வெளியாகியிருக்கும் நகைச்சுவை திரைப்படம். இன்ஸ்பெக்டராக அவர் நடித்திருக்கும் படத்தில் புதுமுகம் ரிச்சா நாயகியாய் நடித்திருக்கிறார். 
ஹைலைட்:  ரவி தேஜா , சுனில் காமெடி.


அனகனகா ஒ தீருடு: (ஒரு ஊர்ல ஒரு வீரன்)


கிராபிக்ஸ் காட்சிகள் நிறைந்த டிஸ்னி தயாரிப்பில் வெளிவரும் இந்தப் படத்தில் சித்தார்த் மற்றும் சுருதி கமல்ஹாசன் நடித்திருக்கிறார்கள். சிறுவர்களை கவரும் விதத்தில் படமாக்கியிருக்கிறார்கள்.
ஹைலைட்:  கிராபிக்ஸ் காட்சிகள் 


இவை திரையரங்குளில் வெளியாகிறது. இவையல்லாமல் ஆதவனும் அயனும் உங்கள் இல்லம் தேடி வரவிருக்கிறார்கள். இந்தப் பொங்கலை இனிதே கொண்டாடி மகிழுங்கள். பொங்கலோ பொங்கல்!!

11 comments:

  1. தமிழ்படங்கள் பற்றி மட்டும்தான் தெரியும்! எதெது நல்லாயிருக்குன்னு பார்ப்போம்!

    ReplyDelete
  2. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. இதில் எத்தனை படங்கள் நீங்க பார்க்கப்போரிங்க?

    ReplyDelete
  4. anaithu padangalin atheetha alasal

    happy pongal

    ReplyDelete
  5. நன்றி எஸ்.கே!
    சிறுத்தை நல்ல இருக்கு!! மற்ற படங்கள் பார்த்துவிட்டு விமர்சனம் போடறேன்.
    இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்!!

    ReplyDelete
  6. ஆடுகளத்தில் காவலனுக்கும் சிக்காமல் இளைஞனுக்கும் சிக்காமல் சீறிப் பாயும் சிறுத்தையைப் பார்க்கப் போகிறேன்!!
    இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்!!

    ReplyDelete
  7. வருகைக்கு நன்றி தமிழ்ப் பையன்!!
    உங்க பொங்கல் திருநாள் பதிவைப் படித்தேன் நன்றாக இருந்தது.
    இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்!!

    ReplyDelete
  8. நன்றி உமாபதி!!
    இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்!!

    ReplyDelete
  9. வாவ்... நல்ல முன்னோட்டம் ஆனந்த்... மிரப்பக்காய்: (மிளகாய்) பார்க்க தூண்டும் பெயர் தான்... மத்ததும் பாப்பேன்... இந்த ஊர்ல பொழுது போகணுமே விண்டேர்ல...ஹா ஹா...

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...