Showing posts with label புலி. Show all posts
Showing posts with label புலி. Show all posts

Thursday, October 1, 2015

புலி - திரை விமர்சனம்


இன்ட்ரோ  
                           பேஃண்டஸி (Fantasy) உலகம் என்பது ஒவ்வொருவரும் கனவு காணும் ஒரு மாய உலகம். அங்கே எது வேண்டுமானாலும் நடக்கலாம். எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். மந்திர, மாயாஜால சக்திகள், தந்திர வித்தைகள் என எதை வேண்டுமானாலும் நிகழ்த்திக் காட்டக் கூடிய பரந்து விரிந்த ஒரு அழகிய உலகம். இந்த களத்தை வைத்துக் கொண்டு ஹாலிவுட்காரர்கள் காட்டும் வித்தைகளை இன்றளவும் வாயை பிளந்து கொண்டு பார்க்கும் ரசிகனாய் மட்டுமே நாம் இருக்கிறோம். அருமையான அந்த களத்தில் புகுந்து விளையாட வாய்ப்பிருந்தும் தவற விட்டது இந்தப் புலி..!


                          




கதை
                            வேதாள உலகத்தின் அராஜக ஆட்சியை முறியடிக்கவும் அந்த நாட்டின் தளபதி கடத்திச் சென்ற தன் காதல் மனைவியை மீட்கவும் வேதாள தேசம் செல்கிறான் மருதீரன். வழியில் சில சித்திரக்குள்ளர்கள், பேசும் பறவைகள்  மற்றும் ஒரு இராட்சத ஆமையின் உதவியுடன் வேதாள தேசம் அடைகிறான். கொடுங்கோல் ஆட்சி புரியும் அந்த மகாராணி மற்றும் தளபதியிடமிருந்து தன் நாட்டையும், மனைவியையும் எப்படி மீட்டான் என்பதே கதை.
                             
        
                                                                                                                                            ஆக்க்ஷன் 
                           சரித்திர படம் என்ற போதும் போலிஸ் கட் ஹேர்ஸ்டைலுடன் திரையில் தோன்றும் அசாத்திய தைரியம் விஜய் அண்ணாவை தவிர வேறொருவருக்கும் இருக்குமா என்பது ஐயமே! இந்த படத்தில் ஒரு படி மேலே போய் வசனங்களை ரீவைண்ட் பட்டனை இரண்டு முறை அழுத்தினாற் போல் மெதுவாக பேசுவதன் காரணமோ, ஆங்காங்கே தோன்றும் அரசியல் மற்றும் பயனற்ற பஞ்ச் களோ அவருடைய ரசிகர்களைக் கூட திருப்தி படுத்தாது என்பதை உணர வேண்டிய நேரம் வந்துவிட்டது.

                           தமிழ் உச்சரிப்பில் தன் தந்தையின் பெயரை சந்தையில் விற்கிறார் ஸ்ருதி ஹாசன். மேலும் கதையோடு ஒட்டாத இவர் நடிப்பு, ஸ்ரீதேவியின் தெளிவில்லாத கதாப்பாத்திர படைப்பு, காமெடி என்ற பெயரில் சத்யன்-தம்பி ராமையா கூட்டணியின் மொக்கைகள், பிரபு மற்றும் கிச்சா சுதீப்பின் வீணடிப்பு என படத்தின் மைனஸ்கள் ஏராளம். ஹன்சிகா கொஞ்சம் ஆறுதல் அளிக்கிறார்.
                             
                             பல வலிகளையும் தாங்கியபடி படத்தின் இறுதிக்கு வந்துவிட்டோம் என்ற சந்தோஷத்தில் ஆடியன்ஸ் இருக்கும் போது அப்பாவாக இன்னொரு விஜய் வருவது ஹிம்சையின் உச்சகட்டம். விஜயை தவிர வேறெந்த கதாப்பாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப் படவே இல்லை.

இசை-இயக்கம்
                               டி.எஸ்.பி யின் பாடல்கள் ஏற்கனவே மீம்களில் கிழித்து தொங்கவிடப்ப்ட்டாலும் ஒரு  பேஃண்டஸி படத்துக்கான இசை படத்தில் எந்த ஒரு காட்சியிலுமே உணர முடியவில்லை. இயக்குனர் சிம்புதேவன் இம்சை அரசன் தவிர அவர் படங்கள் எதுவும் வியாபார ரீதியாக வெற்றி பெறாத போதும் ரசிகர்களை அரங்கிற்கு அழைத்து வரும் சக்தியாக இருந்தார். இந்தப் படத்திற்கு பின் அது தொடர்வது கடினமே!


                                      ஆவிக்கு பிடித்த பாடல்/ காட்சி 
                               பெரிய சைஸ் ஆமை, ஒற்றைக் கண்ணன் மற்றும் ஆரம்ப சண்டைக் காட்சிகள் சில ரசிக்க வைத்தன. இருப்பினும் மொத்தத்தில் இது மக்களை குதறும் புலி.

                

***

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...